ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட், டுவிட்டர் - இணையும் கரங்கள்

by SAM ASIR, Jul 28, 2018, 15:03 PM IST
பயனர்களின் விவரங்கள் கசிவது உள்ளிட்ட தனிநபர் காப்புரிமை அக்கறையின்பேரில் தொழில்நுட்ப துறையை சேர்ந்த அனைவரும் மக்களின் தகவல்களை பாதுகாத்திட இணைந்து செயல்பட வேண்டும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தினமும் யாராவது ஒருவர், ஏதாவது ஒரு நிறுவனத்திலிருந்து தனிநபர் தரவுகள் தவறான நபர்களிடம் போய் சேருவது குறித்து பேசிக்கொண்டே இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை இயக்குநர் டேவிட் பாஸேர் கூறியுள்ளார்.
 
"தனியுரிமை பாதுகாக்கப்பட்ட எத்தனையோ முயற்சிகளை செய்கிறோம். ஆனால், பிரச்னைக்கு எங்களால் மட்டும் பதில்களை கண்டுபிடித்திட இயலவில்லை. எங்களுடைய செயல்பாட்டு சங்கிலியில் உள்ள நிறுவனங்களுடனான தொடர்பை துண்டித்திடவும் இயலாது. ஆகவே, மக்களின் தனியுரிமைக்கும் தரவுகளின் பாதுகாப்புக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் வகையில் தரவுகளின் மாற்றத்தை உயரிய தரத்தில் செயலாக்க நாம் இணைந்து பணிபுரிய வேண்டியுள்ளது," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
டேட்டா டிரான்ஸ்பர் ப்ராஜக்ட் (Data Transfer Project - DTP)என்ற தரவு மாற்ற திட்டத்தில் தாங்கள் இணைந்து செயல்பட இருப்பதாக ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட் மற்றும் டுவிட்டர் ஆகியவை கடந்த வாரம் அறிவித்துள்ளன. 
பல செயலிகள், ஃபேஸ்புக் நிறுவனத்தின் இயங்குதளத்தில் செயல்படுவதால், பரிமாறப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட ஏதுவாகி விடுவதாகவும், பயனர்கள் அறிந்திடாவண்ணமும், அவர்களின் அனுமதி இல்லாமலும் தனிப்பட்ட தரவுகள் விற்கப்படுவதாகவும் கூறியுள்ளதுடன், கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா மோசடியை தொடர்ந்து எல்லா செயல்பாடுகளையும் முழுவதுமாக மூடிவிட்டால், செயலிகள் தரவுகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்று சிலர் கூறி வருகின்றனர். ஆனால், பயனர்கள் தகவல்களை பரிமாறுவதை மட்டுப்படுத்தி விட்டோமானால் அவர்கள் திருப்தியாக உணரமாட்டார்கள் என்றும் டேவிட் பாஸேர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 
தரவு மோசடியை தொடர்ந்து முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாததால்,  ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் 20 சதவீதம் சரிவை சந்தித்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 120 பில்லியன் டாலர் ஒரே நாளில் குறைந்துள்ளது. ஃபேஸ்புக்கை மாதந்தோறும் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்தும் பயனர்களின் எண்ணிக்கை 11 சதவீதம் மட்டுமே உயர்ந்து 2.23 பில்லியனாக உள்ளது. இந்த உயர்வு கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் குறைவானதாகும்.

You'r reading ஃபேஸ்புக், கூகுள், மைக்ரோசாஃப்ட், டுவிட்டர் - இணையும் கரங்கள் Originally posted on The Subeditor Tamil

More Akkam pakkam News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை