Jul 29, 2019, 10:52 AM IST
கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் மீது பாஜக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் என கூறப்படுகிறது. Read More
Jul 27, 2019, 14:29 PM IST
அரசியலில் நட்போ , பகையோ நிரந்தரமில்லை என்பது கர்நாடக அரசியல்வாதிகளுக்கு ஏகப் பொருத்தமாகிவிட்டது போலும். பாஜகவின் சதியால் ஆட்சியை இழந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளம், இப்போது எடியூரப்பாவுக்கு ஆதரவு தரப்போவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Jul 26, 2019, 22:48 PM IST
சட்டசபையில் வரும் 29-ம் தேதியன்று காலை 10 மணிக்கு பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று கர்நாடக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள எடியூரப்பா கூறியுள்ளார். Read More
Jul 26, 2019, 14:00 PM IST
கர்நாடகாவில் போதிய மெஜாரிட்டி இல்லாத நிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரி, நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாஜக சிதைத்து விட்டதாகவும், ஆளுநரும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும் கர்நாடக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. Read More
Jul 25, 2019, 13:34 PM IST
ஆந்திராவில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்களின் வேலைவாய்ப்பில் 75 சதவீதம், அம்மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கே வழங்க வேண்டுமென்று புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. Read More
Jul 24, 2019, 12:26 PM IST
அனைத்துக் கட்சிகளும் அரசியல் செய்ய பணத்தையே பிரதானமாக நினைக்கின்றன. இப்படிப்பட்ட அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மனிதர்களே அல்ல என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் காட்டமாக விமர்சித்துள்ளார். Read More
Jul 23, 2019, 14:54 PM IST
கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ள நிலையில் முதல்வர் குமாரசாமி மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட பெரும்பாலான ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் இன்று சட்டசபைக்கு வரவில்லை.ஆளும் கட்சி தரப்பில் இருக்கைகள் காலியாக கிடப்பதைப் பார்த்த சபாநாயகர் கோபமடைந்து எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Read More
Jul 23, 2019, 11:01 AM IST
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. Read More
Jul 23, 2019, 10:07 AM IST
கர்நாடக மாநிலத்தில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங் - மஜத கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துவதை காலம் தாழ்த்தி வருகிறது. அதிருப்தி எம்எல்ஏக்களை எப்படியாவது வளைத்து விடலாம் என்ற நப்பாசையில், நேற்றும் பல்வேறு நாடகங்களை நடத்தி, சட்டப்பேரவையில் நள்ளிரவு வரை நீடித்த விவாதம் கடைசியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதனால் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு கட்டாயம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 22, 2019, 12:19 PM IST
ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் நாளை காலை 11 மணிக்கு தம் முன் நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் அடுத்த அதிரடி ஆயுதத்தை தொடுத்துள்ளார். இதனால் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. Read More