May 11, 2019, 10:57 AM IST
5 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஏதோ பெரிய சாதனைகளைப் படைத்து விட்டதாக உரக்க கோஷமிட்ட மோடியின் உண்மை முகம் இந்தத் தேர்தலில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிற ஆரம்பித்து கடைசியில் எல்லாமே வெத்து வேட்டு என்ற நிலைக்கு வந்து அம்பலப்பட்டுவிட்டது. இதனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் மோடியின் குரலில் இருந்த கம்பீரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்போது சுரத்தின்றி போய்விட்டது.எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பிரதமர் மோடி, இப்போது கையில் எடுக்கும் ஆயுதங்கள் எல்லாம் பூமராங் போல அவர் பக்கமே Read More
May 10, 2019, 09:31 AM IST
நிலக்கரிச் சுரங்க ஊழலில் மே.வங்க முதல்வர் மம்தாவுக்கும், திரிணாமுல் கட்சியினருக்கும் தொடர்பிருப்பதாக பிரதமர் மோடி கூறிய குற்றச்சாட்டுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். தன் மீதோ தன் கட்சியின் ஒருத்தர் மீதோ குற்றச்சாட்டை நிரூபிக்கணும். இல்லாவிட்டால் அதற்கு தண்டனையாக, பிரதமர் 100 தோப்புக்கரணம் போட வேண்டும் என சவால் விடுத்துள்ளார் மம்தா பானர்ஜி Read More
May 9, 2019, 11:28 AM IST
ராகுல் காந்தியின் விமர்சனங்களுக்கு அவருக்குத்தான் பதிலடி கொடுக்க வேண்டுமே தவிர, அவருடைய தந்தை மறைந்து விட்ட ராஜீவ் காந்தியைப் பற்றி விமர்சிப்பது நியாயமில்லை என்று பிரதமர் மோடியின் கருத்துக்கு பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அக்கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
May 6, 2019, 19:44 PM IST
குத்துச்சண்டை களத்தில் இறங்கிய பாக்சர் மோடியின் முதல் குத்து அவருக்கு பயிற்சி கொடுத்த மூத்த தலைவரான அத்வானிக்குதான் என ராகுல்காந்தி மேடையில் குத்துச்சண்டை வீரர் போல் நடித்துக் காட்டி விமர்சனம் செய்தது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது Read More
May 4, 2019, 08:28 AM IST
முந்தைய காங்கிரஸ் ஆட்சியிலும் 6 முறை சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கூறியதற்கு ஆதாரம் எங்கே என பிரதமர் மோடி கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல், ராணுவத்தையே பிரதமர் மோடி சந்தேகிப்பதா? என்று விளாசியுள்ளார் Read More
May 2, 2019, 11:05 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
Apr 30, 2019, 15:32 PM IST
திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 40 பேர் தன்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற பிரதமர் மோடியின் கருத்துக்கு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன்,மோடியின் இது மாதிரியான வெட்கக்கேடான பேச்சுக்கு 72 ஆண்டுகள் தடைவிதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் Read More
Apr 29, 2019, 11:55 AM IST
தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியும், பாஜக தலைவர் அமித் ஷாவும் தொடர்ந்து ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படை குறித்து பேசி வருவதை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது Read More
Apr 28, 2019, 13:19 PM IST
மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக தெலுங்கானாவைச் சேர்ந்த மஞ்சள் விவசாயிகள் 50 பேர் போட்டியிடுகின்றனர். Read More
Apr 26, 2019, 12:32 PM IST
மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதி யில் போட்டியிடும் பிரதமர் மோடி இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார். இதில் பாஜக கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அதிமுக சார்பில் வாரணாசி சென்றுள்ள துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர் வேலுமணி, மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஆகியோரும் ஆஜராகினர் Read More