Aug 7, 2019, 11:34 AM IST
இந்திய அரசியலில் பிரகாசமாக ஜொலித்து உச்சங்களை தொட்ட ஒரு சில பெண்களில் சுஷ்மா ஸ்வராஜூம் குறிப்பிடத்தக்கவர். இளம் வயதிலேயே அரசியலில் காலடி எடுத்து வைத்த சுஷ்மா, தனது 25 வயதிலேயே அரியானா மாநிலத்தில் எம்எல்ஏவாகி அமைச்சராகவும் பொறுப்பு வகித்த பெருமைக்குரியவர். அதன் பின்னர் 7 முறை எம்பியாகி, மத்திய அமைச்சராகவும் திறம்பட செயல்பட்டு தேசிய அரசியலில் முக்கியப் பங்கு வகித்த சுஷ்மாவின் வாழ்க்கை வரலாற்றைப் பார்ப்போம். Read More
Aug 7, 2019, 10:00 AM IST
ஒரே வருடத்தில் மதன்லால் குரானா, ஷீலா தீட்சீத், சுஷ்மா ஸ்வராஜ் என 3 முன்னாள் முதல்வர்களை டெல்லி மாநிலம் இழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. Read More
Aug 7, 2019, 08:59 AM IST
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். உலக நாடுகளின் தலைவர்களும் சுஷ்மாவுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். Read More
Jul 31, 2019, 13:42 PM IST
ஆடி மாத அமாவாசை தினமான இன்று தமிழகத்தில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காவிரி சங்கமம் என்று நீர்நிலைகள் உள்ள புண்ணிய தலங்களில் மக்கள் புனித நீராடினர். மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். Read More
Jul 30, 2019, 15:56 PM IST
தமிழக அரசியலில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக அவ்வப்போது காமெடி நடத்தி வந்த ஜெ. தீபா எனும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள், இப்போது ஒரேயடியாக அரசியலில் இருந்து முழுக்கு போடுவதாகக் கூறி காமெடி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இனி கணவருடன் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தி குழந்தை, குட்டிகளைப் பெற்றுக் கொள்ளப் போகிறேன். Read More
Jul 30, 2019, 09:14 AM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலையை தான் மட்டுமே செய்ததாக திமுக பெண் பிரமுகரின் மகன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். திரும்பத் திரும்ப தான் மட்டுமே கொலை செய்ததாக கார்த்திகேயன் கூறுவது போலீசாருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையில் குறைந்தது 3 பேருக்காவது தொடர்பிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். Read More
Jul 29, 2019, 14:19 PM IST
நெல்லையில் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உள்ளிட்ட 3 பேர் படுகொலை வழக்கில் அதிரடி திருப்பமாக திமுக பெண் நிர்வாகியின் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஆற்றில் வீசியதாக தெரிவித்ததையடுத்து தாமிரபரணி ஆற்றில் போலீசார் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். Read More
Jul 29, 2019, 12:05 PM IST
டெல்லி உள்பட 13 இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். இதில், முக்கிய அரசியல் புள்ளிகள் தொடர்புடைய ‘குரூப்’ நிறுவனத்தின் 200 கோடி கறுப்பு பணச் சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 26, 2019, 14:09 PM IST
முத்தலாக், தகவல் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ஆகிய மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது மனப்பூர்வமாக ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாகவே அதிமுக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Jul 23, 2019, 12:58 PM IST
‘இந்தியா எப்போதுமே காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நாட்டின் தலையீட்டை ஏற்றுக் கொண்டதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எனவே, டிரம்பின் பொறுப்பற்ற பேச்சுக்காக இந்தியாவிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அமெரிக்க எம்பி ஒருவர் கூறியுள்ளார். Read More