கர்நாடகா இடைத்தேர்தல் நிறுத்தி வைப்பு.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கர்நாடகாவில் 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெறவிருந்த இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. Read More


பதவியிழந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தேர்தலில் போட்டியிட முடியுமா? சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்..

கர்நாடகாவில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி கோரி, சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். Read More


இனி வெள்ளை நிற காஷ்மீர் பெண்களை மணக்கலாம்; பாஜக எம்எல்ஏ சர்ச்சை

இனி வெள்ளை நிற காஷ்மீர் அழகுப்பெண்களை திருமணம் செய்து கொள்ள தடை இல்லை என்பதால், கட்சித் தொண்டர்கள் பலர் ஆர்வமாக உள்ளதாக உ.பி.யைச் பா.ஜ.க எம்எல்ஏ ஒருவர் குஷியாக பேசியுள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. Read More


உ.பி.யில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணை கொல்ல சதி; வழக்கு சிபிஐக்கு மாற்றம்

பலாத்கார உ.பி.மாநிலம் உன்னாவ் நகரில் பாஜக எம்எல்ஏவால் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் விபத்துக்குள்ளான வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டுள்ள பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்கார் உட்பட 10 பேர் மீது சிபிஐ இன்று வழக்கும் பதிவு செய்துள்ளது. Read More


பதவி விலகிய 4 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்; தேர்தலில் போட்டியிட சீட் உறுதி

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவரும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மூவரும் நேற்று பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் இன்று முதலமைச்சர் பட்நாவிஸ் முன்னிலையில் பாஜகவில் சேர்ந்தனர். Read More


கார் மீது டிரக் மோதல்; உ.பி. பாஜக எம்எல்ஏ மீது பாலியல் புகார் கூறிய பெண்ணை கொல்ல முயற்சி?

உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. மீது பாலியல் பலாத்கார புகார் அளித்த இளம் பெண்ணை கொல்ல நடந்த முயற்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More


தகுதி நீக்கத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு ;கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் முடிவு

கர்நாடக சபாநாயகரின் தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக பதவி பறிக்கப்பட்ட 17 எம்எல்ஏக்களும் அறிவித்துள்ளனர். Read More


17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் : சபாநாயகரின் அவசர முடிவுக்கு காரணம் இதுதான்

கர்நாடகாவில் பாஜகவின் எடியூரப்பா முதல்வராகி நாளை நம்பிக்கை வாக்கு கோர உள்ளார்.இந்நிலையில் ஒரு நாள் முன்னதாக, மேலும் 14 அதிருப்தி எம்எல்ஏக்களை சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடியாக தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால் எடியூப்பா, நாளை நம்பிக்கை வாக்கெடுப்பில் எளிதாக வெல்வது உறுதி என்றாலும், சபாநாயகரின் அவசர முடிவுக்கும் பல காரணங்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. Read More


அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் தகுதி நீக்கம் - கர்நாடக சபாநாயகர் அதிரடி

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மாதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 14 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் ரமேஷ்குமார் அதிரடி காட்டியுள்ளார். ஏற்கனவே 3 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பதவி பறிக்கப்பட்ட எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. Read More


'குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்தது'- அதிருப்தி எம்எல்ஏக்கள் ஆஜராக மறுப்பு

காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் அதிருப்தி எம்எல்ஏக்கள் அனைவரும் இன்று காலை நேரில் ஆஜராக வேண்டும் என கர்நாடக சபாநாயகர் உத்தரவிட்டிருந்த நிலையில், தங்களுக்கு 4 வார அவகாசம் வேண்டும் எனக் கூறி எம்எல்ஏக்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் குமாரசாமி அரசின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்து, ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. Read More