May 24, 2019, 13:40 PM IST
கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், டிடிவிக்கு ஆதரவாக திரும்பியதால் அவரது எம்.எல்.ஏ.பதவி பறிக்கப்பட்டது. தற்போது இடைத்தேர்தல் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று Read More
May 24, 2019, 13:27 PM IST
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் அந்த கட்சிகளின் தலைவர்களை கடுமையாக விமர்சித்து பல்வேறு மீம்ஸ்கள் உலா வருகின்றன. தமிழகம், புதுச்சேரியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க, மதிமுக, கொமதேக, முஸ்லீம்லீக் ஆகிய கட்சிகள் இணைந்து போட்டியிட்டன. வேலூர் தவிர மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38ல் இந்த அணி அமோக வெற்றி பெற்றது Read More
May 24, 2019, 12:37 PM IST
ஆர்.கே.நகரில் மாயவேலை செய்து வென்ற டி.டி.வி.தினகரனை இந்த தேர்தலில் மக்கள் நிராகரித்து விட்டனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார் Read More
May 24, 2019, 12:16 PM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனர் என்று கொங்கு மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். தி.மு.க. கூட்டணியில் கொ.ம.தே.க. கட்சி சார்பில் சின்ராஜ், நாமக்கல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவருடன், கொ.ம.தே.க. பொதுச் செயலாளர் ஈஸ்வரன், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின்னர், நிருபர்களிடம் ஈஸ்வரன் கூறியதாவது: Read More
May 22, 2019, 13:32 PM IST
அ.தி.மு.க.வை விட்டு விலகி, வேறு கட்சிக்கு போகவே மாட்டேன் என்று தோப்பு வெங்கடாசலம் கூறியுள்ளார் Read More
May 22, 2019, 10:30 AM IST
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தல்களில் பதிவான வாக்குகள், மொத்தம் 45 மையங்களில் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன Read More
May 21, 2019, 14:35 PM IST
தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள 38 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலில் பதிவான ஓட்டுகள் வரும் 23-ந் தேதி எண்ணப்பட உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது வாக்கு எண்ணும் மையத்தில் அதிமுக ஏஜண்டுகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அறிவுரை கூறி ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தலைமைக் கழகம் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர் Read More
May 21, 2019, 12:12 PM IST
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை கருத்துத் திணிப்பு என்று முதல்வர் பழனிச்சாமி கூறியிருந்தார். அதற்கு நேர்மாறாக துணை முதல்வர் ஓபிஎஸ், மக்களின் மனநிலையை பிரதிபலித்துள்ளது எனக் கூறியுள்ளது அதிமுகவினரிடையே சர்ச்சையையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது Read More
May 21, 2019, 12:03 PM IST
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரான தோப்பு வெங்கடாசலம், கட்சியில் அம்மா பேரவை இணைச் செயலாளர் பதவியில் இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவை உறுதி மொழி குழு தலைவர் மற்றும் வருவாய், சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தவர். இவருக்கும், தற்போது சுற்றுச்சூழல் அமைச்சராகவும், திருப்பூர் மாவட்டச் செயலாளராகவும் உள்ள கே.சி.கருப்பணனுக்கும் இடையே நீண்ட நாட்களாக பனிப்போர்நிலவுகிறது Read More
May 20, 2019, 13:01 PM IST
மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். தமிழகத்தைப் பொறுத்தவரை கருத்துக் கணிப்பு என்பது வெறும் கருத்துத் திணிப்பு தான் என்றும் அது பொய்த்துவிடும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார் Read More