முன்னாள் சபாநாயகர் தற்கொலை.. சிபிஐ விசாரிக்க நாயுடு கோரிக்கை..

ஆந்திர முன்னாள் சபாநாயகர் கோடெலா சிவபிரசாதராவ் தற்கொலையில் சந்தேகம் எழுவதால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார். Read More


வரலாற்றில் கருப்பு நாள்: சந்திரபாபு நாயுடு பேட்டி

ஆந்திராவில் ஜெகன் அரசைக் கண்டித்து குண்டூருக்கு போராட்டம் நடத்தச் செல்லவிருந்த சந்திரபாபு நாயுடு தடுக்கப்பட்டு, வீட்டில் சிறை வைக்கப்பட்டார். அப்போது நாயுடு கூறுகையில், ஆந்திர வரலாற்றில் இது கருப்பு நாள் என்றார். Read More


சந்திரபாபுவுக்கு சிறை: ஆந்திராவில் பதற்றம்.. தெலுங்குதேசம் போராட்டம்

ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தெலுங்குதேசம் கட்சியினர் இன்று பெரிய போராட்டம் நடத்துகின்றனர். இதனால், சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அங்கு பதற்றம் நிலவுகிறது. Read More


ஆந்திராவுக்கு ரூ.6000 கோடி கடன் தர என்.டி.பி. வங்கி ஒப்புதல்

ஆந்திராவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காக ரூ.6 ஆயிரம் கோடி கடன் தருவதற்கு என்.டி.பி. வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. Read More


சந்திரபாபு நாயுடுவுக்கு என்ன பாதுகாப்பு? ஐகோர்ட் கேள்வி

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு எப்படி பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, பாதுகாப்பு பணியில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்ற விவரங்களை ஆந்திர மாநில அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. Read More


குப்பம் தொகுதியில் வாக்காளர்களிடம் உருகிய சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவரது சொந்த தொகுதியான குப்பத்தில் வாக்காளர்களை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இதற்காக விஜயவாடா கன்னவரன் விமான நிலையத்தில் இருந்து பெங்களூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக குப்பம் சென்றார் Read More


சந்திரபாபு நாயுடு கட்டிய அரசு கட்டடம் இடிப்பு; ஜெகன் மோகன் உத்தரவு

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது அமராவதியில் கட்டப்பட்ட அரசு கட்டடத்ைத இடிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார் Read More


ஜெகன் கட்சிக்கு தாவ நினைத்த தெலுங்குதேசம் எம்.எல்.ஏ.க்கள்!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள், ஆளும்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு தாவ ஆசைப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களை ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டார் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி Read More


வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடக்குமா?.. தலைமை தேர்தல் ஆணையரிடம் 21 எதிர்க்கட்சிகள் முறையீடு!

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இன்று மாலை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தவும், எந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More


காங். தலைமையில் அணி சேர்க்கும் பணியில் நாயுடு சுறுசுறுப்பு - 2-வது முறையாக ராகுலுடன் தீவிர ஆலோசனை!

பாஜக மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடக் கூடாது என்பதில் தீவிரம் காட்டும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜக கூட்டணியில் இல்லாத மற்ற எதிர்க்கட்சிகளின் தலைவர்களை அணிதிரட்டும் பணியில் மும்முரமாகி விட்டார். நேற்று ராகுல் காந்தியை சந்தித்த நாயுடு, இன்றும் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தியது டெல்லி வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாகியுள்ளது. Read More