ரிசர்வ் வங்கி தனது காலாண்டு கூட்டத்தில், ரெப்போ விகிதத்தை மேலும் 0.25 சதவீதம் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டிவிகிதம் குறையும் எனத் தெரிகிறது
மும்பையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு தொடர்பாக 6 இடங்களில் மத்திய அமலாக்கப்பிரிவினர் ரெய்டு நடத்தியுள்ளனர்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் ரூ.32 ஆயிரம் கோடி வரை முறைேகடுகள் நடந்துள்ளன. இது தொடர்பாக 2480 வழக்குகள் பதிவாகியுள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால், 1.76 லட்சம் கோடி ரூபாய் உபரி நிதியை வழங்க ரிசர்வ் வங்கி முன் வந்துள்ளது. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வழி தெரியாமல், ரிசர்வ் வங்கி பணத்தில் சமாளிப்பது துப்பாக்கி குண்டு காயத்துக்கு பிளாஸ்திரியை ஒட்டி சமாளிப்பது போன்றது என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி துணை கவர்னர் விரால் ஆச்சார்யா பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ராஜினாமா செய்துள்ளார்.
ஒரு வங்கிக் கணக்கில் இருந்து இன்னொரு வங்கிக் கணக்கிற்கு பணம் பரிமாற்றம் செய்யும் நெப்ட், ஆர்.டி.ஜி.எஸ். முறைகளில் அடுத்த மாதம் முதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கையில் ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளில் வீட்டுகடன், வாகனக் கடன் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் சென்னையில் ஒரு போர்ட் மீட்டிங்கிற்காக வந்த போது, அவரிடம் செய்தியாளர்கள் சிலர் கேட்ட கேள்விக்கு அவரும் மனம் விட்டு பதிலளித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் rsquoகூகுள் பேrsquo செயலி உரிய லைசென்ஸ் பெற்று இயங்குகிறதா? இல்லையா? என்ற கேள்வியை டெல்லி உயர்நீதிமன்றம் ரிசர்வ் வங்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
புதிதாக 20 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களும் எளிதில் அடையாளம் காணும் வகையில் இந்த நாணயம் அச்சிடப்பட்டுள்ளது.