வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்ந்தது. இறுதிக்கட்டமாக இன்று மாலை நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் திமுக கூட்டணிக் கட்சி களின் தலைவர்கள் பங்கேற்றனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த ஒரு மாத காலத்தில் இந்தத் தொகுதியில் ரூ.3.57 கோடி பணம், பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்களவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை முடிவடைகிறது. நாளை மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்த அடுத்த நிமிடமே யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கப் போகிறது என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் புள்ளி விபரங்களுடன் தயாராக காத்துக் கிடக்கின்றன.
மதுரையில் மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது
மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. போலீசாருடன் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கம்புகளுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது
நாட்டிலேயே இதுவரை நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் தான் அதிகபட்சமாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக 77.68% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிக பட்சமாக கண்ணூர் தொகுதியில் 83.05 % வாக்குகளும், ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில் 80.3% வாக்குகளும் பதிவாகி சாதனை படைத்துள்ளது கேரள மாநிலம்
உ.பி.யில் தேர்தலில் வாக்களிக்கச் சென்ற பகுஜன்கட்சித் தொண்டர் ஒருவர், தவறுதலாக பாஜகவின் தாமரை சின்னத்தில் ஓட்டுப் போட்டு விட்ட விரக்தியில் ஓட்டுப் போட்ட தனது விரலை துண்டித்து தனக்குத் தானே தண்டனை கொடுத்த விபரீத சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஒரு வழியாக தமிழகத்தில் ஒரு மாதத் துக்கும் மேலாக நடந்த தேர்தல் திருவிழா ஆரவாரமாக முடிவடைந்துள்ளது. ஆரம்பத்தில் யார்? யாருடன் கூட்டணி என்பதற்காக நடந்த திரை மறைவு ரகசிய பேச்சுகள், அதன் பின்னணியில் நடந்த பேரங்கள் என தமிழக அரசியல் களம் சினிமாவை மிஞ்சும் வகையில் நாளுக்கு நாள் திடீர், திடீர் திருப்பங்களை சந்தித்து ஒரு வழியாக கூட்டணி முடிவானது.
தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பிலும் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளதால் ஒரு ஓட்டு கூட பதிவாகாமல் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடியுள்ளன
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்களும், பிரபலங்களும் காலை முதலே தங்கள் ஜனநாயகக் கடமையை ஆர்வத்துடன் நிறைவேற்றி வருகின்றனர்.