காட்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட குகையநல்லூர், ஏரந்தாங்கல், செம்பராயநல்லூர், ஆரியமுத்துமோட்டூர், குப்பாத்தமோட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற
தமிழகக் காவல்துறையில் இதுவரை இல்லாத நடைமுறையாக ஸ்பெஷல் டிஜிபி என்ற பணியிடத்தை ஏற்படுத்தி அதன்மூலம் விபரீத விளையாட்டுக்கு முதலமைச்சர் வித்திட்டுள்ளார் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தைப் பிரிப்பதற்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2 ஆகப் பிரிக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் எதிர்ப்பு தெரிவித்தார்
தமிழக சட்டசபை வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரை 7 நாட்களாவது நடத்த வேண்டுமென்று துரைமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.கொரோனா பரவல் காரணமாக, சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மார்ச் மாதம் அவசரமாக முடிக்கப்பட்டது.
பேராசிரியர் அன்பழகன் மறைவுக்குப் பிறகு திமுகவில் காலியாக இருக்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் பொருளாளராக இருந்தவரும் மூத்த தலைவருமான துரைமுருகன் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு எழுந்தது. அதற்கேற்ப, பொருளாளர் பதவியைக் கடந்த மார்ச்சில் ராஜினாமா செய்தார் துரைமுருகன்.
சென்னையில் நிலவும் வரலாறு காணாத குடிநீர் பிரச்னைக்கு தற்காலிக தீர்வு காண தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தினமும் ஒரு கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் எடுத்துச் சென்றால் போராட்டம் வெடிக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென எச்சரிக்கை விடுத்துள்ளது அக்கட்சிக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்திற்குள்ளேயே எதிர்ப்பு காட்டினால் அண்டை மாநிலத்துக்காரன் நமக்கு எப்படி தண்ணீர் தருவான் என துரைமுருகனின் கருத்துக்குக்கு கண்டன குரல்கள் எழுந்து சர்ச்சையாகி உள்ளது
அடுத்த 50 ஆண்டு காலத்திற்கு ஸ்டாலின் கையில் தான் தமிழகம் இருக்கும் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் வீட்டில் ரூ 10 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பாகிக் கிடக்க, அதே வேலூரில் பிரபல தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் ரூ 200 கோடி பணம் பதுக்கப்பட்டிருந்ததை வருமான வரி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் ஐடி ரெய்டு நடத்த அதிகாரிகள் வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது