நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ள படம் “பூமி”.
ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் படம் பூமி. லக்ஷ்மன் இயக்கி உள்ளார். இப்படம் தியேட்டரில் வெளியாகுமா? ஒடிடியில் வெளியாகுமா என்ற ஊசலாட்டம் இருந்து வந்த நிலையில் பொங்கல் தினத்தில் டிஸ்னி ஹாட் ஸ்டார் ஒடிடி தளத்தில் வெளியாகிறது என்று அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது.
கொரோனா வைரஸ் பீதி கொஞ்சம் விலகி மீண்டும் இயல்பு வாழ்க்கை மக்கள் மத்தியிலும் திரையுல்கினரிடமும் திரும்பி வந்துக்கொண்டிருக்கும் நிலையில் 2வது கொரோனா அலை என்ற விவகாரம் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
நடிகர் ஜெயம் ரவி தற்போது நடிக்கும் படம் பூமி. இதில் அவருக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். ரோமியோ ஜூலியட், போகன் படங்களை இயக்கிய லஷ்மண் இயக்குகிறார். இப்படம் பற்றி வலைத் தளங்களில் ஒடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதுபற்றி படத் தரப்பு இன்னும் உறுதி செய்யவில்லை
ஜெயம் ரவி, நிதி அகர்வால் நடிக்கும் பூமி படத்தை இயக்கி உள்ளார் லக்ஷ்மன். விவசாயிகளுக்கும் கார்ப்பரேட்களுக்கும் இடையே நடக்கும் போராட்ட பின்னணியில் இதன் கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் டீஸர், ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் காக்கா முட்டை, கனா, போன்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி மாலையை சூடியவர்.
ஜெயம் ரவி நடித்த படம் தனி ஒருவன். இதில் அரவிந்த் சாமி வில்லனாக நடித்திருந்தார். மோகன்ராஜா இயக்கி இருந்தார். இப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது, நயன் தாரா ஹீரோயினாக நடித்திருந்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அதிரடி திரில்லராக அமைந்திருந்த தனி ஒருவன் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.
கோலிவுட்டில் பிரபலமாக இருக்கும் ஹீரோக்களில் சிலருக்கு இயக்குனர் ஆகும் எண்ணம் உள்ளது. கமல்ஹாசன், அர்ஜூன் போன்ற நடிகர்கள் ஏற்கனவே படங்கள் இயக்கி உள்ளனர், அடுத்து வல்லவன் படத்தைச் சிம்பு இயக்கினார். தற்போது துப்பறிவாளன்2 ம் பாகம் படத்தை விஷால் இயக்க உள்ளார்.
கொரோனா ஊரடங்கால் திரையுலகம் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. பல கோடிகள் கொட்டி செலவு செய்து எடுக்கப்பட்ட திரைப்படங்கள் முடங்கி இருக்கின்றன. கடந்த 6 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் செய்ய முடியவில்லை.
ஜெயம் ரவிக்கு இப்போது நேரம் நன்றாக இருக்கிறது. டிக் டிக் டிக், போகன், தனி ஒருவன், மிருதன் சமீபத்தில் வெளியான கோமாளி என எல்லா படங்களுமே ஹிட்டாக அமைந்தன.