ஒவ்வொரு ஆண்டும் சிறந்த கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த கலைஞர்களுக்குக் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. சினிமா மற்றும் பிற துறைகளில் சிறந்த வல்லுநர்களுக்கும் தரப்படுகிறது.
நடிகர்கள் ராமராஜன், சிவகார்த்திகேயன், யோகி பாபு, பழம்பெரும் நடிகைகள் சரோஜா தேவி, சவுக்கார் ஜானகி, இளம் நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா ராஜேஷ், தேவதர்ஷினி, மதுமிதா இசை அமைப்பாளர்கள் டி இமான், தீனா, பாடகர்கள் சுஜாதா, அனந்து ஆகியோருக்கு கலைமாமணி விருது வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர் சங்கத்தின் 12வது மாவட்ட மாநாடு விழுப்புரம் அருகே உள்ள காணையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் பல்வேறு வகை வேடமிட்டுப் பங்கேற்றனர்.
Tamilnadu Government has to give out the pending kalaimamani awards