நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படம், தொடக்கம் முதலே திரை ஆர்வலர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்த திரைப்படமாகவுள்ளது. உலகளவில் டிஸ்னி+ , ஹாட் ஸ்டார் வி ஐ பி (Disney+ Hotstar VIP ) தளத்தில் வரும் தீபாவளி நன்நாளில் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தில் ஆச்சர்யம் தரும் கிளைமாக்ஸ் பற்றிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நயன்தாரா முதன்முறையாக அம்மன் வேடத்தில் நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன். 15 வருடத்துக்கு பிறகு பக்தி படம் வருகிறது என்று எதிர் பார்த்திருந்தனர். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார்.
நடிகை நயன்தாரா இதுவரை ஏற்காத வேடத்தில் முதன்முறையாக அம்மன் வேடம் ஏற்று நடித்திருக்கும் படம் மூக்குத்தி அம்மன்.