மருத்துவமனையிலிருந்து வெளியேறிய அவர், ஊடகவியலாளர்களிடம் அனுபவம் நன்றாக இருந்தது என்று கூறினார்
ஐயப்பனின் கோபம் இடதுசாரிகள் அரசு மீது இருக்கும் என்று கூறியிருந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மக்களிடையே மிக மோசமான இமேஜ் உள்ளது. முதல்வர் பினராயி விஜயனுக்கு பத்தில் மூன்று மார்க் கூட கொடுக்க முடியாது என்று மெட்ரோ மேன் என அழைக்கப்படும் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் முன்னாள் தலைவர் ஸ்ரீதரன் கூறுகிறார்.
கடந்த 2016 வரை ஆட்சிகள் வருவதில் தமிழகமும், கேரளாவும் ஒரே போலத் தான் இருந்தது. ஒரு முறை ஆட்சிக்கு வரும் கட்சி அல்லது கூட்டணி அடுத்த முறை ஆட்சி அமைக்காது. ஆனால் கடந்த 2016ல் இந்த வரலாற்றை ஜெயலலிதா திருத்தினார். தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் ஆட்சி அமைத்தார்.
படிக்கும் மாணவர்கள் உள்ள அனைத்து வீடுகளுக்கும் மலிவு விலையில் லேப்டாப்புகள் வழங்கப்படும் என்றும், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அனைவருக்கும் இலவசமாக இன்டர்நெட் இணைப்பு கொடுக்கப்படும் என்றும் என்று கேரள சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் கூறினார்.
கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் நாளை முதல் தியேட்டர்கள் திறக்கப்படுகின்றன. முதல் படமாக பெரும்பாலான தியேட்டர்களில் விஜய்யின் மாஸ்டர் ரிலீசாகிறது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கொரோனா பரவலைத் தொடர்ந்து கேரளாவில் 10 மாதங்களுக்கு மேலாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டு கிடக்கின்றன.
கேரளாவில் சினிமா தியேட்டர்களை திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை எப்போது திறப்பது என்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்று கேரள பிலிம் சேம்பர் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகக் கேரள சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய பாஜக உறுப்பினர் ராஜகோபால், பின்னர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக டிசம்பர் 31ஆம் தேதி சட்டசபையை கூட்ட மீண்டும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இதுவரை கவர்னர் ஆரிப் முகமது கான் அனுமதி அளிக்காததால் இன்று இரண்டு அமைச்சர்கள் கவர்னரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.