. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இன்று(ஜன.14) தமிழகத்திற்கு வந்தார். மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை அவர் நேரில் பார்த்து ரசித்தார். ஜல்லிக்கட்டைப் பார்ப்பதற்காக அங்கு வந்திருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, ராகுல்காந்தியைச் சந்தித்து அவருடன் உரையாடினார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நேற்று(டிச.25) சென்னைக்கு வந்தார். கிண்டியில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், புதிய இந்தியா சமாச்சார், விவசாயிகளின் நலன் காக்கும் மோடி அரசு ஆகிய புத்தகங்களை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
கேரள வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இடம் பிடித்துள்ளார்.
சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட நாடுகளில் கொரோனாவுக்கு தடுப்பூசி போடத் தொடங்கி விட்டார்கள். இந்தியாவில் எப்போது தொடங்கப் போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பூசி வினியோகம் இன்னும் தொடங்கவில்லை.
மோடி அரசுக்கு எதிர்ப்பவர்கள் எல்லாருமே தேசவிரோதிகள் என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
மடியும் எங்கள் அடிமையின் மோகம் என்ற வரி நாட்டு நிலைமையை நினைவூட்டுகிறது. வாழ்க பாரதி புகழ்
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று(டிச.8) இரவு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, இப்பிரச்சனைக்காக ஜனாதிபதியை எதிர்க்கட்சியினர் நாளை சந்திக்கின்றனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள ராகுல்காந்தி, பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும் என்று கோரிக்கையுடன் போலீஸார் போராட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அகமது படேல், காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர். கடந்த அக்டோபர் 1-ம் தேதியன்று அவருக்கு கொரோனா பாதிக்கப்பட்டது. இதனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.