மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சுவாமி தரிசனம் செய்தார்.
மனிதர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக காட்ட வேண்டிய நபர் ராஜேந்திர பாலாஜி.
இருந்த போதிலும் இருவரின் தீவிர ஆதரவாளர்களும் இப்போதே குரல் எழுப்பத் தொடங்கி விட்டார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முன்னாள் அமைச்சரும், பாட நூல் கழக தலைவருமான வளர்மதி, முதல்வரைப் புகழ்ந்து அதிமுக கட்சி பத்திரிகையான நமது அம்மாவில் கவிதை எழுதியிருந்தார்.
முஸ்லிம்களிடம் நான் தவறாக பேசவே இல்லை என்றும், தேர்தலுக்காக தன்னைப் பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
தன்னிடம் மனு அளிக்க வந்த முஸ்லிம்களை இழிவுபடுத்தியதாகக் கூறி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பல்வேறு கட்சிகள், அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டுமென்றும் கோரியள்ளன.
சீமான் என்ன யோக்கியனா? அவர் வெளிநாடுகளுக்கு சென்று பணம் வசூல் செய்வது எங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறாரா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை லாபத்தில் இயங்கிய ஆவின் நிறுவனத்தில் தற்போது பெரும் ஊழல் நடைபெறுவதாகவும், அதனால் ரூ.300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், அமைச்சர் மற்றும் நிர்வாக இயக்குனரை உடனடியாக நீக்கிவிட்டு, ஆவினை காப்பாற்ற வேண்டும் என்றும் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு, முதல்வர் மீது பொறாமை என்று அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திர பாலாஜி ஆகியோர் விமர்சித்துள்ளார்கள்.
அதிமுக அரசை கவிழ்க்கப் பார்த்தால் திமுகவையே 2 ஆக உடைத்து விடுவோம் என்றும், இதனால் ஆட்சியைக் கவிழ்ப்போம் என பூச்சாண்டி காட்டவேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீண்டும் சீண்டியுள்ளார்.
கர்நாடகாவில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது போல் அதிமுக அரசும் கவிழும்... நாங்கள் நினைத்தால் இன்றே அதிமுக ஆட்சியை கவிழ்ப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதற்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மிரட்டல் தொனியில் பதிலடி கொடுத்துள்ளார்.நாங்கள் ஒன்றும் குமாரசாம போல் ஏமாந்தவர்கள் அல்ல.. நாங்கள் மோசமான வர்கள் .. அதிமுக அரசு மீது கை வைத்தால் தெரியும் சங்கதி என ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.