மூணாறு நிலச்சரிவு ₹3.50 கோடி நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி இரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்தன. போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படையினர் நடத்திய மீட்புப்பணியில் மண்ணுக்கடியில் இருந்தும், அருகில் உள்ள ஆற்றிலிருந்தும் 66 உடல்கள் மீட்கப்பட்டன. Read More


மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடி பகுதியில் கடந்த 6ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 தொழிலாளர்கள் மண்ணோடு புதைந்தனர். இரவில் நிலச்சரிவு நடந்த போதிலும் மறுநாள் காலையில் தான் இந்த பயங்கர சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ளவர்களுக்குத் தெரியவந்தது. Read More


மூணாறு நிலச்சரிவு மீட்புப் பணிகள் நாளை முதல் மீண்டும் தொடரும்

கடந்த இரு வாரங்களாகத் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் பல்வேறு சிரமங்களைத் தாண்டி தேசிய பேரிடர் மீட்புப் படையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களது கடும் முயற்சியால் தான் 65 உடல்கள் மீட்கப்பட்டன. Read More


மூணாறு நிலச்சரிவு.... மீட்புப்பணிகளை தொடர்வதா, வேண்டாமா? இன்று முக்கிய முடிவு

மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 7ம் தேதி நள்ளிரவில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் வசித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 82 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இவர்களில் பலர் காட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.மறுநாள் முதல் மீட்புப் பணிகள் தொடங்கின.இதில் 12 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர் Read More


பாசக்கார குவி நாயை கேரள போலீஸ் துப்பறியும் நாய் பிரிவில் சேர்க்க முடிவு

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானவர்கள் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 14வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு கர்ப்பிணி உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. Read More


குவி இனி அனாதை அல்ல, நாயை வளர்க்க முன்வந்த காவல் அதிகாரி

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் 82 பேர் இருந்திருக்கலாம் என்று கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. Read More


மூணாறில் மேலும் ஒரு சிறுவனின் உடல் மீட்பு

நிலச்சரிவு ஏற்பட்ட மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் உடல்களைத் தேடும் பணி இன்று 13வது நாளாகத் தொடர்ந்தது. இன்று புதிதாக ரேடார் கருவி மூலம் உடல்களைத் தேடும் பணி நடந்தது. இந்த தேடுதல் வேட்டையில் இன்று கண்ணன் என்பவரது மகன் 8 வயதான விஷ்ணு என்ற சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. Read More


மூணாறு நிலச்சரிவில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க ரேடார் கருவி

மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் நிலச்சரிவில் சிக்கியவர்களின் உடல்களைத் தேடும் பணி இன்று 13வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 6 வயது சிறுவன் மற்றும் இந்த சிறுவனின் தாத்தா உள்பட 3 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இதுவரை இந்த நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. Read More


மூணாறு நிலச்சரிவு இன்று மேலும் 3 உடல்கள் மீட்பு

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பெட்டி முடியில் கடந்த 6ஆம் தேதி இரவு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் 82 பேர் மண்ணுக்குள் புதைந்தனர். இரவு 11 மணியளவில் நடந்த இந்த கோரச் சம்பவம் மறுநாள் காலை 7 மணிக்குப் பின்னர் தான் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது. Read More


8 நாளாக காத்திருப்பு... எஜமானரின் குழந்தையை கண்டுபிடித்த நாய்! -பெட்டி முடி `பாச காட்சி

மூணாறு பெட்டி முடி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் எஸ்ட்டேட் தொழிலாளர்கள் தங்கியிருந்த 22 குடியிருப்புகள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துவிட்டது. அதிலிருந்த 83 தொழிலாளர்கள் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை. Read More