எடப்பாடிதான் நடுரோட்டில் நின்றிருப்பார்..

Feb 13, 2021, 11:13 AM IST

தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் சார்பில், அவர்களில் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு உள்ளிட்ட 4 பேர் மதுரையில் பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:

டி.டி.வி. தினகரன் பின்னால் சென்றதால் 18 எம்.எல்.ஏக்களும் நடுரோட்டில் நிற்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியிருக்கிறார். மனசாட்சியை அடமானம் வைத்து விட்டு எடப்பாடி பழனிசாமி போல் எங்களால் பேச முடியாது. எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் அவரை சசிகலா முதல்வராக்கினார். அதே போல், நாங்கள் 18 எம்.எ்ல்.ஏ.க்கள் சட்டசபையில் வாக்களிக்காமல் இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமிதான் இப்போது நடுரோட்டில் நின்றிருப்பார். தவறாக பேசுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றனர்.

அதிகம் படித்தவை