உச்சபட்ச விலையை தொட்டது டீசல் விலை!
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு டீசல், பெட்ரோல் விலை உச்சத்தை தொட்டுள்ளது.
உலக அளவில் கச்சா எண்ணெய் அதிக அளவு உற்பத்தி செய்யும் ரஷ்யாவும், கச்சா எண்ணெய்யை அதிகம் விநியோகிக்கும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பும், கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது- மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்டுள்ளசரிவு ஆகியவையே கச்சா எண்ணெய்விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, பேரல் 70 டாலர்களை தொட்டதால் பெட்ரோல் - டீசல் விலையும் உயர்வு கண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
உண்மையில், கச்சா எண்ணெய்யை பொறுத்தவரையில், 2014-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு பேரல் 109.05 டாலராக இருந்தது. அதன்பின் விலை சரிந்து அந்த ஆண்டு டிசம்பரில் 70 டாலர்கள் என்ற அளவில் விற்பனையானது.
எனினும் அப்போதும் பெட்ரோல்- டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதையே புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இந்நிலையில், டெல்லி, மும்பை, கொல்கத்தாம், சென்னை ஆகிய ஊர்களில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9 பைசாவும், டீசலுக்கு 14 முதல் 16 வரையும் உயர்த்தப்பட்டுள்ளன.
2014 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு இதுவே டீசல் விலையில் அதிகபட்சம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் தெரிவித்துள்ளது. பெட்ரோல் விலையும் 73 ரூபாய் 80 காசுகளை எட்டியுள்ளது.