சயன், மனோஜை கடத்திச் சென்றனர்.. தமிழக போலீஸ் மீது வழக்குத் தொடரப் போவதாக மாத்யூ அறிவிப்பு!

விசாரணை என்ற பெயரில் சயன், மனோஜை தமிழக போலீசார் அத்துமீறி கடத்திச் சென்றதாக மாத்யூ சாமுவேல் புகார் தெரிவித்துள்ளார். தமிழக போலீசார் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் மாத்யூ கூறியுள்ளார்.

கோடநாடு கொள்ளை, தொடர் கொலைகள் மர்மம் குறித்து டெல்லியில் மாத்யூ சாமுவேல் வெளியிட்ட ஆவணப் படம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது நேரடியாக பழி சுமத்தியதால் மாத்யூ சாமுவேல், சயன், மனோஜ் ஆகிய 3 பேர் மீதும் அவதூறு வழக்குப் பதிந்த சென்னை குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் மனோஜ், சயன் இருவரையும் கைது செய்தனர்.

சென்னை அழைத்து வரப்பட்ட இருவரிடமும் பல மணி நேரம் விசாரணை நடத்தி நேற்றிரவு நீதிபதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் கைது செய்ததற்கான போதிய ஆதாரங்களை போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிபதி சரிதா கண்டனம் தெரிவித்து இருவரையும் விடுவித்தார்.

இந்நிலையில் சயன், மனோஜை தமிழக போலீசார் அத்துமீறி கடத்திச் சென்றதாக மாத்யூ குற்றம் சாட்டியுள்ளார்.தமிழக போலீசார் மீது டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் மாத்யூ தெரிவித்துள்ளார்.

More News >>