புதிய சிபிஐ இயக்குநரை உடனே நியமிக்க வேண்டும் - பிரதமருக்கு கார்கே கடிதம்!
சிபிஐ இயக்குநர் பொறுப்பில் தற்காலிகமாக நாகேஸ்வரராவை நியமித்தது சட்டவிரோதம் எனவும், புதிய சிபிஐ இயக்குநரை உடனே நியமிக்க உயர்மட்ட தேர் வுக் குழு கூட்டத்தை கூட்டுங்கள் என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
சிபிஐ இயக்குநர் பதவியிலிருந்து கடந்த 10-ந் தேதி அலோக் வர்மா நீக்கப்பட்டார். பிரதமர் மோடி, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே 3 பேர் கொண்ட குழுவில் அலோக் வர்மா நீக்கத்திற்கு கார் கே எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அலோக் வர்மா நீக்கப்பட்டதால் சிபிஐ யின் தற்காலிக இயக்குநர் பொறுப்பில் நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். நாகேஸ்வரராவின் நியமனம் சட்டவிரோதம் என்றும், தன்னாட்சி அதிகாரம் படைத்த சிபிஐ இயக்குநர் பதவிக்கு தகுதியானவரை உடனே நியமிக்க உயர் மட்ட தேர்வுக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் கடந்த 10-ந் தேதி நடந்த கூட்டத்தில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டின் பேரில் அலோக் வர்மாவை நீக்கியதாக கூறப்பட்டுள்ளது. வர்மா மீதான குற்றச்சாட்டுகள் என்னென்ன என்பது குறித்து பகிரங்கமாக வெளியிட வேண்டும். அத்துடன் வழக்கு விசாரணையை மேற்பார்வையிட்ட ஓய்வு நீதிபதி ஏ.கே.பட்நாயக் அறிக்கையையும் வெளியிட வேண்டும். இயக்குநர் பொறுப்பில் நாகேஸ்வர ராவை தற்காலிகமாக நியமித்தது சட்டவிரோதம் . தன்னாட்சி அதிகாரம் படைத்த இயக்குநரை நியமிக்க ஏன் பயப்பட வேண்டும். உடனே அந்தப் பதவிக்கு தகுதியானவரை நியமிக்க உயர் மட்ட தேர்வுக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என கார்கே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.