கனடாவில் தை பொங்கல் திருவிழா: பிரதமர் ஜஸ்டின் தமிழர்களுக்கு வாழ்த்து
கனடாவின் ஒண்டாரியோவில் வாழும் தமிழர்கள் நான்கு நாட்கள் கொண்டாடும் "தை பொங்கல் " விழாவில் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் துருதியோ பங்கேற்று வாழ்த்தியது தமிழர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமரின் வாழ்த்துச் செய்தியில் "தை பொங்கல் திருநாளில் மக்கள் சந்தோஷத்தை கொண்டாடுவதோடு குடும்பத்தோடு நன்றி தெரிவித்து சர்க்கரை பொங்கல் சமைத்து ஒருவரோடொருவர் பரிமாறிக்கொள்கின்றனர்.
இந்த திருவிழா காலங்களில் கனடாவின் வெற்றிக்கும் வளத்திற்கும் முக்கிய பங்காற்றும் தமிழ் கனடியர்களை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது .எனது குடும்பத்தின் சார்பாக நானும் எனது மனைவியும் தை பொங்கலை கொண்டாடும் உங்களை வாழ்த்துகிறோம் " என தெரிவித்துள்ளார்.
கனடாவின் டொரொண்டோவில் குடியேறிய தமிழர்கள் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.இப்பகுதியில் மட்டும் 2 லட்சத்துக்கு மேலான தமிழர்கள் வாழ்கின்றனர்.