உளவாளிகள் என சந்தேகித்து இரு அப்பாவிகளை சுட்டுக்கொன்ற நக்சல்கள்!
பீகாரில் நக்சலைட்டுகளால் இரு அப்பாவி கிராமவாசிகள் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரின் ஜமுய் மாவட்டத்தில் நக்சல்களின் ஆதிக்கம் அதிகம். இங்குள்ள கிராமம் ஒன்றில் போலீசுக்கு உளவு சொல்லும் உளவாளிகள் தங்கியுள்ளதாக நக்சலைட்டுகளுக்கு சந்தேகம் எழுந்தது. நேற்று நள்ளிரவில் கும்பலாக வந்த நக்சலைட்டுகள் வீடு புகுந்து 2 பேரை சுட்டுக்கொன்று விட்டு ஓடி விட்டனர்.
இருவரின் சடலம் மீது போலீசுக்கு துப்புக் கொடுத்தால் இது தான் பரிசு என்று எழுதப்பட்ட துண்டுச் சீட்டுகளையும் வீசிச் சென்றுள்ளனர். ஆனால் சுட்டுக் கொல்லப்பட்ட குலாம், உஸ்மான் அன்சாரி இருவரும் அப்பாவிகள் என்பதால் கோபமடைந்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது போல் அடிக்கடி அப்பாவிகள் கொல்லப்படுவதாகவும் நக்சல்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் குரல் கொடுத்தனர்.