கட்அவுட், பேனர், பாலாபிஷேகம் வேண்டாம் ..... கவுண்டரில் டிக்கெட் எடுத்து படம் பார்த்தா போதும் ...... சிம்பு வெளியிட்ட வீடியோ

தன் படத்திற்கு அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். வீணாக செலவழிப்பதற்கு பதில் தாய், தந்தையருக்கு துணிமணி எடுத்துக் கொடுங்கள் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தன் ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் சிம்பு கூறுகையில், "வந்தா ராஜாவாகத்தான் வருவேன்" படம் நல்லபடியாக முடிந்து பிப்.1-ந் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை பிளாக்கிலோ,கூடுதல் கட்டணம் கொடுத்தோ பார்க்க வேண்டிய அவசியமில்லை. தியேட்டர் கவுண்டரில் உரிய கட்டணத்தில் பார்த்தால் போதும்.

கட் அவுட், பேனர்,பாலாபிஷேகம் என்று வீண் செலவும் செய்ய வேண்டாம். நமக்கு முதலில் அப்பா, அம்மாதான் எல்லாமே .எனவே வீணாக செலவழிப்பதற்கு பதிலாக பெற்றோருக்கு புது துணிமணி எடுத்துக் கொடுத்தும், சகோதர, சகோதரிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுங்கள் என சிம்பு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#STR wishes Pongal for all his fans

 

More News >>