மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் - திமுக வுக்கு அழைப்பில்லை!

வரும் 19-ந் தேதி கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின தலைவர்கள் பலரும் பங்கேற்கின்றனர் என மம்தா தெரிவித்துள்ளார். ஆனால் திமுக வுக்கு அழைப்பு விடாதது பெரும் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் பலத்தை நிரூபிக்கும் வகையில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தை மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ள முக்கிய தலைவர்கள் யார்? யார்? என்ற பட்டியலை மம்தா வெளியிட்டார்.

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தேசியவாத மாநாட்டுக் கட்சித் தலைவர் சரத் பவார், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உட்பட காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பா.ஜ.க. அல்லாத கட்சிகளின் தலைவர்கள் பெரும்பாலோர் பங்கேற்கின்றனர் என மம்தா தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர் ராகுலும், முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் பங்கேற்காத நிலையில் காங்கிரஸ் சார்பில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்கிறார்.

மாயாவதி பங்கேற்காதது குறித்து கேட்டதற்கு,மாயாவதி வராவிட்டாலும், அவருடைய கட்சியின் சார்பில் யாரேனும் பங்கேற்பார்கள் என்றார். கேரள முதலமைச்சரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான பினராயி விஜயனுக்கும் அழைப்பு விடுத்ததாகவும் இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றார் மம்தா .

இந்த மெகா எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு திமுகவை அழைக்காதது ஏன்? என்ற சர்ச்சை எழுந்துள்ளது. சென்னையில் கலைஞர் சிலைத் திறப்பு விழாவில் ராகுல், சோனியா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு உள்ளிட்ட பல தலைவர்கள் முன்னிலையில் அடுத்த பிரதமராக ராகுல் காந்தியை பிரகடனப்படுத்தினார் ஸ்டாலின் .இதனை மம்தா ரசிக்கவில்லை.உடனடி ரியாக்ஷனாக பிரதமர் யார்? என்பது தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தான் என்று தடாலடியாக தெரிவித்தார். பிரதமராக ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் முன்மொழிந்த காரணத்தாலேயே திமுகவுக்கு மம்தா அழைப்பு விடவில்லை எனத் தெரிகிறது. இதே போன்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் புறக்கணித்துள்ளார் மம்தா .

More News >>