திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்..
எனக்கும் அனிஷாவுக்கும் விரைவில் திருமணம் என்பது உண்மை தான் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால் அதிகாரப்பூர்வமாக அறவித்துள்ளார்.
தமிழில் முன்னணி நடிகரான விஷால், நடிகர் சங்கத்தின் பொது செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
நடிப்பு மட்டுமின்றி, அரசியல் களத்திலும் அவ்வபோது கருத்துகளையும் வெளியிட்டு வருகிறார். இதைதவிர, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார் விஷால்.
இதற்கிடையே, விஷாலின் திருமணம் குறித்து பல முறை வதந்திகள் பரவின. இந்நிலையில், கடந்த மாதம் விஷாலின் தந்தை விரைவில் விஷாலுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், ஆந்திராவை சேர்ந்த பெண் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக விரைவில் அறிவிப்பேன் என்று விஷால் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று ட்விட்டர் பக்கத்தில் தான் திருமணம் செய்துக் கொள்ளும் பெண்ணுடன் கூடிய புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் வெளியிட்டிருந்தார். அதில், ஆமாம். உண்மை தான். மிகவும் சந்தோஷமாக உள்ளது. அவரது பெயர் அனிஷா அல்லா. அவர் ஒப்புக் கொண்டார். திருமணம் உறுதியாகிவிட்டது. என் வாழ்க்கையின் அடுத்த மிகப் பெரிய நகர்வு இது. என்று குறிப்பிட்டிருந்தார்.