நிக்கோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.0 ஆக பதிவு
அந்தமானின் நிக்கோபர் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டரில் இது 6.0 ஆக பதிவாகி உள்ளது. இதனால் சுனாமி அச்சம் ஏற்பட்டுள்ளது.
அந்தமான் நிக்கோபர் தீவுகள் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படுகிற பகுதியாகும். நிலநடுக்கங்கள் சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகளை உருவாக்கி பேரழிவுகளை உருவாக்குகின்றன.
இன்று அதிகாலை 2.53 மணிக்கு அந்தமானின் நிக்கோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இது ரிக்டரில் 6.0 ஆக பதிவாகி இருக்கிறது.