ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு காளைகளுக்கு வணக்கம்! #Jallikattu
பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, வென்ற வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமது ட்விட்டர் பக்கத்தில் ஸ்டாலின் பதிவிட்டுள்ளதாவது:
உழவுச் சமூகத்தில் மனிதனும் உயிர் தான். மாடும் உயிர் தான்.
தமிழர் திருநாளாம் பொங்கல் நாளை முன்னிட்டு நடந்த #Jallikattu போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கும், வென்ற வீரர்களுக்கும் பாராட்டுகள்.
சிறப்பான காளைகளாக தேர்வு செய்யப்பட்ட காளைகளுக்கும் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.