ஜல்லிக்கட்டு போராட்டம் நினைவாக நினைவுச் சின்னம் - அமைச்சர் உதயக்குமார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் பங்கேற்றவர்களின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க முயற்சிகள் எடுக்கப்படும் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை அமைச்சர் உதயக்குமார் தொடங்கி வைத்தார். ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு கடந்த ஆண்டு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சேர்ந்து அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்ததின் நினைவாக கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.

அப்போது அமைச்சர் உதயக்குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டை மீட்டெடுத்த இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் நினைவாக நினைவுச் சின்னம் அமைக்க முதல்வருக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.

More News >>