எங்க பக்கம் 1 எம்.எல்.ஏ.வை வளைத்தால் 2 மடங்காக உங்க எம்.எல்.ஏக்களை வளைப்போம்ல.. பா.ஜ.க.வை தெறிக்கவிடும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி
ஆபரேசன் தாமரை 2.0 முயற்சியை தொடர்ந்தால் பூமராங்காகி பா.ஜ.க.வை வீழ்த்தும். ஒரு பங்குக்கு ரெண்டு பங்கு திருப்பி அடிப்போம் என கர்நாடக முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பா.ஜ.க.வின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி குறித்து பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் குமாரசாமி கூறுகையில், கர்நாடகத்தில் குதிரை பேரத்தை பிரதமர் மோடியே ஊக்கப்படுத்துகிறார்.
மாநில ஆளுநர் இந்த குதிரை பேரத்தை ஆதரிக்கக் கூடாது. பா.ஜ.க வின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி வெற்றி பெறப்போவதில்லை.
ஆபரேசன் கமலா (ஆபரேசன் தாமரை) பூமராங்காகி பா.ஜ.க.வை தாக்கும். எங்கள் பக்கம் ஒரு எம்.எல்.ஏ.வை இழுக்க முயன்றால் இரண்டு பங்காக பா.ஜ.கவினரை எங்கள் பக்கம் இழுப்போம். பா.ஜ.க பக்கம் என்னை இழுக்க பேரம் நடப்பதாக கூறுவதில் உண்மையில்லை.
காங்கிரசுக்கும் எனக்கும் எந்த ஊடலும் இல்லை. சந்தேகப்பட்டால் காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவருடன் ஆளுநரை சந்தித்து நிருபிக்கவும் தயார் என்றார்.