விஸ்வாசம் படத்திற்காக அஜித்தை பாராட்டிய சென்னை காவல் துணை ஆணையர் சரவணன்
விஸ்வாசம் படத்தில் அஜித் வாகனம் ஓட்டும் காட்சிகளில் ஹெல்மெட் அணிந்தும், சீட் பெல்ட் அணிந்தும் இருப்பதால் சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் அஜித்தை பாராட்டியுள்ளார்.
அஜித் நடிப்பில் பொங்கல் முன்னிட்டு கடந்த 10ம் தேதி ரிலீசான படம் விஸ்வாசம். சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் வெற்றிகரமாக அனைத்து தியேட்டர்களிலும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் அஜித் இரு சக்கரம் வாகனம் ஓட்டும் காட்சிகள் இடம் பெறுகின்றன. அஜித் வாகனம் ஓட்டும்போதெல்லாம் ஹெல்மெட் அணிந்திருப்பார். இதுப்போன்ற காட்சிகள் படம் பார்க்க வருபவர்களுக்கு விழிப்புணர்வாக அமைந்துள்ளது.
இதனை பாராட்டி சென்னை காவல் துணை ஆணையர் சரவணன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், விஸ்வாசம் படத்தில் சில காட்சிகள் மகிழ்ச்சியை அளித்தது. படத்தில் கதாநாயகன் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்வது. கதாநாயகன் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெல்ட் அணிந்து கார் ஓட்டுவது. இயக்குனர் சிவா மற்றும் நடிகர் அஜித் குமாருக்கு பாராட்டுகள் என்று பதிவிட்டிருந்தார்.