மயில்சாமி வீட்டில் எம்ஜிஆர் உருவ படத்தை திறந்து வைத்த விவேக்!

எம்ஜிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் மயில்சாமி வீட்டில் எம்ஜிஆரின் உருவ படத்தை நடிகர் விவேக் திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 102வது பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் முக்கிய இடங்களில் எம்ஜிஆரின் உருவப்படம், உருவச் சிலைகளுக்கு ரசிகர்களும், தொண்டர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் மயில்சாமி தனது வீட்டிலேயே எம்ஜிஆரின் உருவப்படத்தை திறந்து மரியாதை செலுத்தினார். மயில்சாமியின் கோரிக்கையை ஏற்ற நடிகர் விவேக் எம்ஜிஆரின் படத்தை திறந்து வைத்தார்.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள விவேக்  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில், இன்று மக்கள் திலகம் பிறந்தநாள். நண்பர் மயில்சாமி வீட்டில் எம்ஜிஆர் அவர்களின் படத்தை திறந்து வைக்கும் பாக்கியம் கிட்டியது! அழகு+ஆளுமை+உதவி=எம்.ஜி.ஆர்!! என்று பதிவிட்டிருந்தார்.

More News >>