மெல்போர்ன் ஒரு நாள் போட்டி - ரன் குவிக்க முடியாமல் ஆஸி.திணறல்!
மெல்போர்னில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ரன் குவிக்க முடியாமல் ஆஸ்திரேலியா வீரர்கள் திணறுகின்றனர்.
3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் கடைசிப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். மழை காரணமாக போட்டி தாமதமாகவே தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களான கேரே (5) பின்ச் (14) இருவரையும் சொற்ப ரன்களில் வேகத்தில் வெளியேற்றினார் புவனேஷ்குமார். பின்னர் ஜோடி சேர்ந்து நிலைத்து ஆடிய கவாஜா (34), மார்ஷ் (39) ஆகியோரை சுழலில் சிக்க வைத்து அடுத்தடுத்து வீழ்த்தினார் சகால்.
தொடர்ந்து வந்த ஸ்டானிசையும் 12 ரன்களில் சகால் வெளியேற்றினார். 35 ஓவரில் 160 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. விளையாடி வருகிறது.
இந்தப் போட்டியில் வென்றால் 2-1 என்ற கணக்கில் இந்தியா தொடரைக் கைப்பற்றி சாதனை படைக்கும். ஏற்கனவே டெஸ்ட் தொடரையும் 2 - 1 என்ற இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.