மெல்போர்ன் ஒரு நாள் போட்டி : 230 ரன்களில் ஆஸ்திரேலியா ஆல் அவுட் !
மெல்போர்னில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய சுழல் வீரர் சகால் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார். மெல்போர்ன் போட்டியில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார் இந்திய கேப்டன் கோஹ்லி. இந்திய சுழல்பந்து வீச்சாளர் சகால் அபாரமாக பந்து வீச ஆஸி. வீரர்கள் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
48.4 ஓவர்களில் 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆஸ்திரேலியா. சகால் 6 விக்கெட்டுகளை சாய்த்து சிறந்த பந்து வீச்சை பதிவு செய்தார்.
வேகப்பந்து வீரர்கள் புவனேஷ்வர், சமி தலா இரு விக்கெட்டுகளை சாய்த்தனர். 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா ஆடி வருகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய மண்ணில் ஒரு நாள் தொடரை முதன் முறையாக கைப்பற்றிய சாதனை படைக்க உள்ளது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் தமிழக வீரர் விஜய்சங்கர் அறிமுக வீரராக களம் இறங்கியுள்ளார்.