ஐயப்பனை இதுவரை 51 பெண்கள் தரிசனம் - உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தகவல்!
சபரிமலை ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தீர்ப்புக்குப்பின் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு இன்று அறிக்கை தாக்கல் செய்தது.
கடந்த ஜனவரி 2-ந் தேதி முதல் இதுவரை 51 பெண்கள் தரிசனம் செய்துள்ளதாகவும் அதில் 24 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
சபரிமலை செல்லும் பெண்களுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.