விஜய் சேதுபதியின் சிந்துபாத் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்
நடிகர் விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் சிந்துபாத் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரீலீஸ் செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி பிட்சா படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன்பிறகு, பிட்சா 2, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்று அடுத்தடுத்து ஹிட் கொடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி.
இன்னும் ஏகப்பட்ட படங்களை கையில் வைத்துள்ள விஜய் சேதுபதிக்கு, ரிலீசாக வேண்டிய படங்களும் வரிசை கட்டி நிற்கிறது.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளியாக இருக்கும் 'சிந்துபாத்' படத்தின் பர்ட்ஸ் லுக் போஸ்டர் இன்று ரிலீசாகி உள்ளது.
அருண் குமார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பன்னையாரும் பத்மினியும் படம் இயக்கிய அதே இயக்குனர் - நடிகர் கூட்டணியில் இந்த படம் தயாராகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.