எதிர்க்கட்சிகளின் கூட்டணி லட்சணத்திற்கு கர்நாடகாவே உதாரணம் - பா.ஜ.க கிண்டல்!
கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்தும் மாநாடு குறித்து மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி டிவிட்டர் பக்கத்தில், ஏற்கனவே யுத்தத்தில் தோற்று விரக்தியில் உள்ளவர்கள் மீண்டும் ஒரு முறை களத்தில குதிக்கப் பார்க்கின்றனர்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் லட்சணத்திற்கு கர்நாடகத்தில் ஆளும் கூட்டணி அரசே உதாரணம். கர்நாடகா போன்றுதான் எதிர்காலத்திலும் நடந்து கொள்வார்கள் என்பது நிச்சயம் என்று தெரிவித்துள்ளார். இதே போன்று மே.வங்கத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுப்ரியா பாபுலும் மம்தாவை சாடியுள்ளார். கொல்கத்தா மாநாட்டுக்காக பணத்தை வாரியிறைக்கும் மம்தா, மே.வங்க மாநிலத்திற்காக எதுவுமே செய்யவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.