மோடியை எதிர்த்தால் மட்டும் போதுமா?.. எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைவர் யார்?.. பா.ஜ.க கேள்வி!
கொல்கத்தாவில் திரண்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்கள் கூட்டணியின் தலைவர் யார் என்பதை அறிவிக்க முடியுமா? என பா.ஜ.க. கேள்வி எழுப்பியுள்ளது.
கொல்கத்தாவில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் மாநாடு குறித்து பா.ஜ.க.செய்தித் தொடர்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி கூறுகையில், கொல்கத்தாவில் கூடிய தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வெற்று கோஷத்தைத்தான் முன் வைக்க முடியும்.
எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தலைமை யார்? என்று அறிவிக்கத் தயாரா? என்று கேள்வி எழுப்பினார். இந்தக் கூட்டத்தால் பா.ஜ.க.வுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. மீண்டும் மோடியே பிரதமராவார் என்று ரூடி தெரிவித்துள்ளார்.