நாடு முழுவதும் ldquoபத்மாவத்rdquo படம் திரையிட அனுமதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு
பல்வேறு தடைகள், சர்ச்சைகள் மீறி, “பத்மாவத்” திரைப்படத்தை அனைத்து மாநிலங்களிலம் திரையிட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சித்தூர் ராணி பத்மினியின் கதை “பத்மாவத்” என்ற பெயரில் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகை தீபிகா படுகோனே, ரன்வீர் கபூர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் இடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது. சென்சார் போர்டும் படத்தை திரையிட அனுமதிக்க மறுத்தனர். இதனால் படத்தின் பெயர் பத்மாவத் என்றும் காட்சிகளில் மாற்றம் செய்தும் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. இதன்பிறகு தான் அனுமதி வழங்கப்பட்டது.
பத்மாவத் படம் நாடு முழுவதும் வரும் 25ம் தேதி திரையிட முடிவு செய்யப்பட்டது. தற்போது மீண்டும் எதிர்ப்பு கிளம்பியதால் ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் இந்தப் படத்தை திரையிட தடை விதித்தன. மேலும், அரியானா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் தடை விதிக்க பரிசீலித்து வருகின்றன.
இந்நிலையில், இந்த தடையை நீக்க கோரி பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய தணிக்கை குழுவினர் அனுமதி அளித்த பிறகும் பத்மாவத் படத்துக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது சட்டவிரோதம். எனவே தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த மனு மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஓய்.சந்திரசூட் ஆகியோரை கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜனவரி 25ம் தேதி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பத்மாவத் படத்தை திரையிட அனுமதியளித்து உத்தரவிட்டது.
சட்டம்ஒ-ழுங்கை பாதுகாக்கும் பொருட்டு இந்தப் படத்தை திரையிட தடை விதித்து குஜராத், ராஜஸ்தான் மாநில அரசுகள் வெளியிட்டிருந்த அறிவிக்கைக்கு நீதபதிகள் தடைவிதித்தனர். மேலும், சட்டம்&ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என்றும் இவ்வழக்கின் விசாரணையை வரும் மார்ச் மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.