தகர்ந்து போன கூட்டணி கனவு....தேர்தல் முடிவதற்குள் தினகரன் கதி? திமுக சீனியர்களின் ஹாட் கிண்டல்

நாடாளுமன்றத் தேர்தலில் ஒரேயடியாக ஓரம்கட்டப்பட்டுவிட்டார் டிடிவி.தினகரன். தேர்தல் முடிவதற்குள் அவர் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக மாறிவிடும் என நக்கலடித்துள்ளனர் திமுகவினர்.

அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக இந்த அணிக்குள் வரும் என தமிழிசை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்.

தம்பிதுரை கொடுத்த பேட்டி, கூட்டணிக்குள் வெடிகுண்டை வீசிவிட்டது. தம்பிதுரையின் பழைய கோபத்தை உணர்ந்து பாஜக தலைவர்களும் விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

எப்படியாவது இந்தக் கூட்டணி அமையாதா என தமிழக பாஜக தலைவர்கள் காத்திருக்கின்றனர். முன்பு ஒருமுறை பேட்டி கொடுத்த தினகரன், திமுகவை விட்டு காங்கிரஸ் எங்கள் அணிக்கு வர வேண்டும் என்றார்.

ஆனால், சோனியா காந்தியின் விருப்பம் திமுகவாக இருந்ததால் அது சாத்தியப்படவில்லை. இதன்பின்னர், கூட்டணி தொடர்பாக மாநிலக் கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்றார் தினகரன்.

அவர் அணி சேர நினைப்பது பாமக, தேமுதிகவுடன் எனத் தெரிந்து, அந்த இரண்டு கட்சிகளையும் தன்னுடைய வலைக்குள் விழ வைத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

 

தினகரனின் கூட்டணி ஆசை நிறைவேறாததை திமுகவினரும் அதிமுகவினரும் கொண்டாடி வருகின்றனர். ஆனாலும், கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசி வருகிறோம் என்கிறார் தினகரன்.

இந்த ஸ்டேட்மெண்ட்டைக் கவனித்த திமுகவின் தலைமை பொறுப்பாளர் ஒருவர், 'இனி பேசுவதற்கு எந்தக் கூட்டணி இங்கே இருக்கிறது. திமுக அணிக்குள் இப்போது வந்தாலும் அவருக்கு அரசியல் வாழ்க்கை இருக்கிறது. 5 சீட்டுகளை ஒதுக்கக்கூட தலைமை தயாராக இருக்கிறது.

தனித்து நின்றால் தென்மாவட்டத்தில் சில ஆயிரம் ஓட்டுக்களை எடுக்கலாம். அவரை நம்பி வேட்பாளராக நின்று செலவழிக்க அமமுகவில் யாரும் தயாராக இல்லை. இவர் பணத்தை எடுத்துத் தரவும் மாட்டார். ஒவ்வொருமுறையும் வாங்கியே பழக்கப்பட்டவர்.

அவர் தனித்து நிற்கிறார் என்பது உறுதியானால், செந்தில்பாலாஜியைப் போல பல விக்கெட்டுகள் சரசரவென விழும். தேர்தல் நாளின்போது தங்க.தமிழ்ச்செல்வன், பழனியப்பன் உள்பட ஒருவருமே அவருடன் இருக்க மாட்டார்கள்' என்று சொல்லிச் சிரித்திருக்கிறார்.

-அருள் திலீபன்

More News >>