மோடி அரசின் ஆயுள் முடிந்துவிட்டது.. தேர்தலுக்குப் பிறகே பிரதமர் தேர்வு.. மம்தா திட்டவட்ட அறிவிப்பு!
பிரதமர் மோடி தலைமையிலான அரசின் ஆயுள் முடிந்துவிட்டது. நாட்டுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது என மே.வங்க முதல்வர் மம் தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட மாநாட்டில் 22 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.இறுதியாக மம்தா பேசுகையில், மோடி அரசின் ஆயுட்காலம் முடிந்து விட்டது. பா.ஜ.க.விடம் அரசியல் நாகரீகமே இல்லாமல் போய்விட்டது.
தங்களுக்கு எதிரானவர்களை திருட்டுப் பட்டம் கட்டுகிறது பா.ஜ.க. இனி இந்தியாவுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட சபதமேற்போம். முதலில் தேர்தலை ஒற்றுமையாக சந்திப்போம். பிரதமர் யார் என்பதை தேர்தலுக்குப் பிறகு முடிவு செய்வோம் என்றார் மம்தா பானர்ஜி.