ஜெ. மறைவுக்கு பிறகு முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவர் தம்பிதுரை... போட்டுடைத்த தினகரன்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்து ஏமாந்தவர் லோக்சபா துணை சபாநாயார் தம்பிதுரை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தினகரன் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜெயலலிதா மறைந்த போது சீனியரான தமக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என ஏமாந்தவர் தம்பிதுரை என நாம் தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். இதை தினகரன் இன்று உறுதி செய்து பேட்டியளித்துள்ளார்.
தினகரன் இன்று அளித்துள்ள பேட்டியில், ஜெயலலிதா மறைந்த போது தம்மை சசிகலா முதல்வராக்குவார் என எதிர்பார்த்தார். ஆனால் ஓபிஎஸ் முதல்வராக்கப்பட்டார்.
அதன்பின்னர் டெல்லிக்குச் செல்லாமல் போயஸ்கார்டனிலேயே முகாமிட்டிருந்தார். ஓபிஎஸ் ராஜினாமா செய்த போதும் தமக்கு முதல்வர் பதவி கிடைத்துவிடும் என மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்தார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார் சசிகலா. இதனால் மிகவும் அதிருப்தியடைந்தார் தம்பிதுரை.
தற்போது லோக்சபா தேர்தல் வருவதால் பாஜகவுடன் இணைந்தால் மீண்டும் வெற்றி பெற முடியாது என கருதுகிறார் தம்பிதுரை. அதனால்தான் பாஜகவுக்கு எதிராக அவர் பேசி வருகிறார்.
இவ்வாறு தினகரன் கூறினார்.
தினகரனின் முழுமையான பேட்டி: