மஞ்சு விரட்டு போட்டியில் காயம் அடைந்த வேலூர் காளை பலி
வேலூர் மாவட்டத்தில் மஞ்சு விரட்டு போட்டியின்போது காயமடைந்த காளை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பால்காரர் (55). கடந்த 10 ஆண்டுகளாக காளை ஒன்றை வளர்த்து வந்தார். ஆண்டுதோறும் நடைபெறும் ஜல்லிகட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்ட போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்த காளை வில்லனாக வலம் வந்தது.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி நடைபெற்ற மஞ்சு விரட்டு போட்டியில் இந்த காளையும் கலந்துக் கொண்டது. போட்டியின்போது, அந்த காளைக்கு கடுமையான காயம் ஏற்பட்டது. இதனால், கடுமையாக பாதிக்கப்பட்ட காளை அது செய்வதறியாமல் எதிர்திசையில் ஓடத் தொடங்கியது. அப்போது, எதிரே வந்த மற்றொரு காளையுடன் மோதியதில் இந்த காளை தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில், நிலைக்குலைந்துபோன அந்த காளை மயங்கி விழுந்து பலியானது.
ஜல்லிகட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் மற்ற காளைகளுக்கு கடும் போட்டியாளராக வலம் வந்த காளை இறந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.