தனிக்கட்சியா?.. ஐயயோ வசதி இல்லீங்க.. அலறும் தம்பித்துரை!

தனிக் கட்சி தொடங்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை ஜகா வாங்கியுள்ளார்.

பா.ஜ.க.வுக்கும் தம்பித்துரைக்கும் சமீப காலமாகவே ஏழாம் பொருத்தமாக உள்ளது. மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்த தம்பித்துரை இப்போது பா.ஜ.க.வுடனான கூட்டணி முயற்சிக்கும் ஆப்பு வைத்து வருகிறார். அதிமுகவை அடிமைப்படுத்தும் எண்ணத்தில் பா.ஜ.க.செயல்படுகிறது. தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில்லை. கஜா புயல் நிவாரணத்துக்கும் கேட்ட நிதியைத் தருவதில்லை.

காவிரிப் பிரச்னையிலும் தமிழகத்துக்கு பா.ஜ.க. துரோகம் செய்கிறது.அப்படி தமிழகத்தை வஞ்சிக்கும் பா.ஜ.கவுக்கு தமிழகத்தில் செல்வாக்கே இல்லாத நிலையில் நாங்கள் தோளில் தூக்கி சுமக்க வேண்டுமா? என்றும் வறுத்தெடுத்தார். இதனால் பா.ஜ.க. தரப்பு க்கு தம்பித்துரை மீது கடும் எரிச்சல் . தம்பித்துரையை அடக்கி வாசிக்க அட்வைஸ் பண்ணுங்க என்று அதிமுக மேலிடத்துக்கு பா.ஜ.க. தரப்பு நெருக்கடி கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் எடப்பாடிக்கும் தம்பித்துரைக்கும் இடையே புகைச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் கொங்கு மண்டலத்தில் தன் செல்வாக்கைக் காட்ட தம்பித்துரை தனிக் கட்சி தொடங்கப் போகிறார் என்று செய்திகள் றெக்கை கட்டி பறந்தது. இப்போதோ அய்யய்யோ அப்படி எல்லாம் இல்லீங்க.... தனிக் கட்சி தொடங்கற அளவுக்கு வசதி இல்லீங்க..... படைபலம் இல்லீங்க... என்று தம்பித்துரை ஜகா வாங்கி விட்டார். அதிமுகவில் என்னமோ நடக்குது.... எல்லாமே மர்மமாதான் இருக்குது.

More News >>