எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோட்டையில் ஓ.பி.எஸ் யாகம் நடத்தினாரா? - சர்ச்சையோ சர்ச்சை!
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக வெளியான தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது.
ஓ.பி.எஸ்.தமது அறையில் நள்ளிரவில் யாகம் நடத்தியதாகவும், அறை புதுப்பிக்கப்பட்டதால் அதற்காக பூஜை நடந்தது என்று தகவல் வெளியானது. இந்த தகவல்கள் வெளியான சிறிது நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யாகம் நடத்தியதை மணவிழா மேடையில் வெளிப்படையாக பேசினார்.
காலை 3.30 மணி முதல் 8.30 மணி வரை ஓ.பி.எஸ்.யாகம் நடத்தியது எதற்காக? கோடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சிறைக்கு செல்வார் என்பதால் தாம் முதலமைச்சராக வேண்டும் என்பதற்காக நடத்தினாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். ஸ்டாலின் கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் உடனடி மறுப்பு தெரிவித்து, அப்படி எந்த யாகமும் நடக்கவில்லை. யாராவது பார்த்தார்களா? என்றும் எதிர் கேள்வி கேட்டதுடன், அதிமுகவின் ஒற்றுமையை சீர்குலைக்க இப்படியெல்லாம் கலகமூட்டுகிறார்கள் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இதனால் தலைமைச் செயலகத்தில் நள்ளிரவில் உண்மையில் நடந்தது தான் என்ன? என்ற சர்ச்சை கிளம்பியுள்ளது.