தீராத முதுகுவலியால் குடும்பத்துடன் தற்கொலை செய்த அரசுப்பள்ளி ஆசிரியர்: கோவையில் சோகம

தீராத முதுகுவலியால் அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோயம்பத்தூர், கருமத்தம்பட்டியைச் சேர்ந்தவர் அந்தோணி ஆரோக்கியதாஸ். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிபாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர், மனைவி ஷோபனா மற்றும் குழந்தைகள் ரித்திக் மைக்கேல், ரியா மற்றும் தாய் புவஜேஸ்வரி ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், அந்தோணி உள்பட மனைவி, குழந்தைகள், தாய் என அனைவரும் நேற்று அவர்களது வீட்டில் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அப்போது, ஆந்தோனி தூக்கில் தொங்கியபடியும், மற்றவர்கள் விஷம் குடித்து இறந்ததும் தெரியவந்தது. பின்னர், உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, போலீசார் நடத்திய விசாரணையில் சடலங்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு கடிதம் சிக்கியது.

அந்த கடிதத்தில், தனக்கு 12 ஆண்டுகளாக தீராத முதுகுவலி இருந்து வருகிறது. கடன்களை வாங்கி சிகிச்சை எடுத்துக் கொண்டும் முதுகுவலி சரியாகவில்லை. நாளுக்கு நாள் முதுகுவலி அதிகமானதால் தற்கொலை செய்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆனால், தனது மனைவி மற்றும் குழந்தைகள், தாயைவிட்டு செல்ல மனமில்லை என்பதால் அனைவருக்கும் விஷம் வைத்துவிட்டு தானும் தற்கொலை செய்துக் கொண்டேன். எங்கள் சாவுக்கு வேறு எதுவும் காரணமில்லை. கடன் கொடுத்தவர்கள் மன்னிக்க வேண்டும் என்று கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

More News >>