பெங்களூரு சொகுசு விடுதியில் காங்.எம்எல்ஏக்கள் குஸ்தி - மது பாட்டிலால் அடித்ததில் ஒருவர் காயம்!
பெங்களூருவில் சொகுசு விடுதியில் தங்கியுள்ள காங். எம்எல்ஏக்கள் இருவர் போதையில் மல்லுக்கட்டினர். மது பாட்டிலால் தாக்கப்பட்ட எம்எல்ஏ ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு பீதியில் கர்நாடக மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பெங்களூரு புறநகரில் உள்ள ஈகிள்டன் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை எம்எல்ஏக்களில் மது விருந்து கொண்டாடியுள்ளனர்.
அப்போது கணேஷ், ஆனந்த்சிங் ஆகிய இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டுள்ளது. திடீரென மதுபாட்டிலால் ஆனந்த்சிங்கின் தலையில் கணேஷ் அடித்துள்ளார். இதில் காயமடைந்த ஆனந்த்சிங் பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சொகுசு விடுதியில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே மோதல் ஏதும் இல்லை. ஒற்றுமையாகத் தான் உள்ளனர். மது பாட்டிலால் எல்லாம் யாரும் தாக்கப்படவில்லை.
திடீர் நெஞ்சு வலியால் ஆனந்த் சிங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் மழுப்பலாக பதிலளித்துள்ளார்.