யாகம் வளர்த்தால் முதல்வரா ஆகிடலாமா? - அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்!
யாகம் வளர்ப்பவர்கள் எல்லாம் முதல்வர் ஆகி விட முடியுமா? என அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளார்.தலைமைச் செயலகத்தில் தமது அறையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை யாகம் வளர்த்ததாக செய்திகள் வெளியாகி சர்ச்சையானது. இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், எடப்பாடி பழனிச்சாமி சிறைக்குச் சென்றால் முதல்வராக வேண்டும் என்பதற்காக ஓ.பி.எஸ்.யாகம் நடத்தினாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நேற்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், யாகம் நடத்தியதற்கு என்ன சாட்சி? யாராவது பார்த்தீர்களா? என்றதுடன், அதிமுகவில் ஒற்றுமையை குலைக்க மு.க.ஸ்டாலின் சதி செய்கிறார் என்னு கூறியிருந்தார். இன்றும் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ஊதுபத்தி, கற்பூரம் கொளுத்தியy கை வந்தாலும் யாகம் வளர்த்ததாக கூறுகிறார்கள்.
யாகம் வளர்ப்பவர்கள் எல்லாம் முதல்வர் ஆகி விட முடியுமா? அப்படியெனில் நீங்களும் யாகம் வளர்த்துப் பாருங்கள் என்று கிண்டலாக பதிலளித்தார். நடந்தா குற்றம், ஓடுனா குற்றம், தும்மினா குற்றம் என்று எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்கிறார் மு.க.ஸ்டாலின் . கோடநாடு குற்றவாளிகளுக்கு துனைபோன குற்றத்தை செய்தது திமுகதான். சயன், மனோஜை ஜாமீன் எடுக்க திமுக வக்கீல்கள் துணை போனதை ஆதாரத்துடன் முதல்வர் அம்பலப்படுத்தியுள்ளார் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.