வாடிக்கையாளர்களுக்கு ஆஹா... போட்டியாளர்களுக்கு ஐயோ...

கட்டணங்களை தற்போது உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லையென்றும், வாடிக்கையாளர் எண்ணிக்கையை பெருக்குவதிலேயே கவனம் செலுத்தி வருவதாகவும் ஜியோ இன்ஃபோகாம் தெரிவித்துள்ளது.

மூன்றாம் நிதி காலாண்டுக்கான சந்தை மதிப்பீட்டாளர்கள் கூட்டத்தில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.

மொத்த மொபைல் வாடிக்கையாளர் மதிப்பில் 24 விழுக்காடான 28 கோடி பேர் ஜியோவை பயன்படுத்துகின்றனர். சந்தை மதிப்பில் இது 26 விழுக்காடாகும். மாதந்தோறும் 90 லட்சம் முதல் 1 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு புதிதாக சேர்ந்து வரும் நிலையில் 2019 நிதியாண்டின் இறுதியில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை ஏறக்குறைய 30 கோடியே 20 லட்சமாக உயர வாய்ப்பிருப்பதாகவும் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்றின் அறிக்கை கூறுகிறது.

நவம்பர் இறுதி வரையிலான காலகட்டத்தில் ஏர்டெல் 34 கோடியே 20 லட்சம் வாடிக்கையாளர்களையும், வோடஃபோன் ஐடியா 42 கோடியே 10 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை மெதுவாகவும், வோடஃபோன் ஐடியா வாடிக்கையாளர் எண்ணிக்கை வெகுவாகவும் சரிந்து வருகிறது.

ஜியோ தனது குறிக்கோளான 40 கோடி வாடிக்கையாளர்களை எட்டும் வரைக்கும் பார்த்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா போன்ற போட்டி நிறுவனங்களின் வருவாயில் தேக்கம் நிலவக்கூடும் என்று சந்தை ஆய்வு நிறுவனங்கள் கருதுகின்றன.

More News >>