பயிற்சியாளர் திட்டியதற்கு கண்டனம்..மொட்டையடித்து ஹாக்கி வீரர்கள் நூதனப் போராட்டம்!

 பயிற்சியாளர் திட்டியதைக் கண்டித்து இளம் ஹாக்கி வீரர்கள் தலையை மொட்டையடித்து நூதனப் போராட்டம் நடத்திய சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது.

ஜபல்பூரில் சில நாட்களுக்கு முன் 19 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டிகள் நடந்தது. இதில் வங்காள அணி வீரர்கள் பங்கேற்ற போட்டி ஒன்றில் 5 - 1 என்ற கோல் கணக்கில் தோற்று வெளியேறினர். இதனால் அணியின் பயிற்சியாளர் ஆனந்த் குமார் கோபமடைந்து, சரியாக விளையாடாத வீரர்கள் அனைவரையும் தலையை மொட்டையடித்து விடுவேன் என்று திட்டியுள்ளார். இதனால் வீரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். போட்டியில் தோற்று ஊர் திரும்பிய பின்னரும் பயிற்சியாளர் திட்டிய சோகம் இளம் வீரர்களுக்கு குறையவில்லை.

பயிற்சியாளருக்கு தங்கள் அதிருப்தியையும், கண்டனத்தையும் நூதன முறையில் தெரிவிக்க முடிவு செய்தனர். பயற்சியாளர் என்ன மொட்டையடிப்பது? நாமே அடித்துக் கொள்வோம் என முடிவு செய்து வீரர்கள் அனைவரும் மொட்டையடித்துக் கொண்டனர். வீரர்கள் இந்த மொட்டைப் போராட்டத்தைக் கண்ட பயிற்சியாளருக்கு அதிர்ச்சி. தோல்வியால் வந்த கோபத்தில் நிதானம் தவறி திட்டிவிட்டதாக வீரர்களிடம் நெகிழ்ந்து சமாதானம் செய்துள்ளார்.

More News >>